Last Updated:
பிகார் சட்டமன்ற தேர்தலில் ROSERA தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிராஜ் கிஷோர் ரவி, பிரேந்திர குமாரிடம் 50533 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி தோல்வி அடைந்தார்.
பிகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிராஜ் கிஷோர் ரவி 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் மூத்த டிஜிபியாக பதவி வகித்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிராஜ் கிஷோர் ரவி, பிகார் சட்டமன்ற தேர்தலில் ரோசிரா (ROSERA) தொகுதியில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் பிரேந்திர குமாரிடம் 50 ஆயிரத்து 533 வாக்குகள் வித்தியாசத்தில் பிராஜ் கிஷோர் ரவி தோல்வியை தழுவினார்.
குடிமைப்பணியில் இருந்து விலகி சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணைந்து கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எம்பியானார். அதேபோல், ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பதவி வகித்தார். அந்த வரிசையில் அரசியலில் சாதிக்கும் திட்டத்துடன் வந்த பிராஜ் கிஷோர் ரவிக்கு பிகார் சட்டமன்ற தேர்தல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
November 15, 2025 9:06 AM IST


