Last Updated:
பிகாரில் வங்கதேசம், நேபாளம் நாட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிகார் வாக்காளர் பட்டியலில் வங்கதேசம், நேபாளம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிகாரில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார், இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் அட்டைகள் உள்ளிட்டவற்றை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் கண்டவர்களிடம் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் அவர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
July 13, 2025 6:14 PM IST


