Last Updated:
பிகாரில் பாதுகாப்பு வழித்தடம் உருவாக்கப்படும் என்றும் ஆயுத தளவாட உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிகாரின் சீதாமரி பகுதியில் 850 கோடி ரூபாய் செலவில் சீதைக்கு கோயில் கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
பிகாரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சாசாராம் பகுதியில் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிதாமரி நகரில் 850 கோடி ரூபாய் செலவில் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் சீதைக்கு கோயில் கட்டப்படும் என்றார்.
மேலும், பிகாரில் பாதுகாப்பு வழித்தடம் உருவாக்கப்படும் என்றும் ஆயுத தளவாட உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் யாத்திரை சென்றதை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, ஊடுருவல்காரர்களை பிகாருக்குள் கொண்டு வரவே இருவரும் யாத்திரை சென்றதாகவும், மாநிலத்திற்குள் ஊடுருவுவோர் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, ஏழை மக்களின் உணவை பறித்துக் கொள்ளக் கூடும் என்றும் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
November 09, 2025 5:07 PM IST
“பிகாரில் ரூ.850 கோடி செலவில் சீதைக்கு கோயில் கட்டப்படும்” – மத்திய அமைச்சர் அமித் ஷா கொடுத்த வாக்குறுதி


