• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகாரில் மீண்டும் மீண்டும் பெண்கள் மீது நடக்கும் அத்துமீறல் சம்பவம் – வைரலாகும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிகாரில் மீண்டும் மீண்டும் பெண்கள் மீது நடக்கும் அத்துமீறல் சம்பவம் – வைரலாகும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 26, 2026 1:12 PM IST

பீகாரின் மந்தர் மலையில் பெண் ஒருவர் காலணியால் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது பீகாரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

வைரலாகும் வீடியோ
வைரலாகும் வீடியோ

பீகாரின் பிரபல சுற்றுலா தலமான மந்தர் மலையில், பெண் ஒருவரை சுற்றி வளைத்து சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், காலணியால் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது மந்தர் மலை. பிரபல சுற்றுலா தலமான இங்கு, பெண் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், இளம்பெண்ணை சுற்றி 6 பேர் நிற்பது பதிவாகியுள்ளது. அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை சுற்றி நின்று அநாகரிகமாக நடந்து கொள்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை நோக்கி ஒருவர் காலணியை பயன்படுத்தி சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.அப்போது அங்கிருந்த மற்றவர்கள் அந்த சம்பவத்தை வேடிக்கை பார்ப்பது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ பவுன்சி காவல் நிலைய போலீஸ் அதிகாரி பங்கஜ் குமார் ஜாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சென்றுள்ளது. வீடியோவை பார்த்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.மந்தர் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். வீடியோவில் இருப்பவர்கள் இளைஞர்களாக தெரிந்தாலும், அவர்களை அடையாளம் காண முடியவில்லை என அப்பகுதி கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் மந்தர் மலை போன்ற சுற்றுலா தலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. பீகாரில் சமீபத்தில் ஜமுய் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவருடன் இருந்த இளைஞரையும் ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்தியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் சமஸ்திபூர் மாவட்டத்தில் பெண் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் ஒரு கும்பல் சுற்றிவளைத்து துன்புறுத்திய மற்றொரு வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜமுய், சமஸ்திபூர் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது மந்தர் மலையிலும் பெண்ணை தாக்கிய வீடியோ வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மந்தர் மலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Previous Post

மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

Next Post

LPG Gas Booking New Rules | கேஸ் சிலிண்டர்.. அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post
LPG Gas Booking New Rules | கேஸ் சிலிண்டர்.. அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

LPG Gas Booking New Rules | கேஸ் சிலிண்டர்.. அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin