• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 10, 2025 2:04 PM IST

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவரங்களை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் - தேர்தல் ஆணையம்உச்ச நீதிமன்றம் - தேர்தல் ஆணையம்
உச்ச நீதிமன்றம் – தேர்தல் ஆணையம்

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவோ சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

பிகாரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களைச் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைத் தர சட்டத்தில் இடமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், எந்தவொரு வாக்காளர் பெயரும் நீக்கப்படாது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகாரில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் மூன்று லட்சம் வீடுகளின் எண்கள் பூஜ்யம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சித்தார். துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Puducherry (Pondicherry)

First Published :

August 10, 2025 2:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Read More

Previous Post

Tamilmirror Online || நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை

Next Post

SGB: தங்கப் பத்திரம் வச்சிருக்கீங்களா? யூனிட்டுக்கு ரூ.10,070 தரும் RBI.. 147% லாபம்! | வணிகம்

Next Post
SGB: தங்கப் பத்திரம் வச்சிருக்கீங்களா? யூனிட்டுக்கு ரூ.10,070 தரும் RBI.. 147% லாபம்! | வணிகம்

SGB: தங்கப் பத்திரம் வச்சிருக்கீங்களா? யூனிட்டுக்கு ரூ.10,070 தரும் RBI.. 147% லாபம்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin