Last Updated:
பிகார் அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மைத்திலி தாக்கூர் 84,915 வாக்குகள் பெற்று RJD பினோத் மிஷ்ராவை வீழ்த்தி மிக இளம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் என்.டி.ஏ. கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 5 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. அதேபோல், மகாகத்பந்தன் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 5 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது.
இந்தத் தேர்தலில் சில முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் முடிவுகள் என்ன என்பதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதில் ஒருவர் பாஜக வேட்பாளரும், பிரபல நாட்டுப்புற பாடகருமான மைத்திலி தாக்கூரின் (25) தேர்தல் முடிவுகள் அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தது.
இந்நிலையில், அவரது அலிநகர் தொகுதியின் 25 சுற்று வாக்கு எண்ணிக்கையும் தற்போது நிறைவு பெற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைதிலி தாக்கூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் பினோத் மிஷ்ராவை விட 11,730 வாக்குகள் கூடுதலாக பெற்று, மொத்தம் 84,915 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், பிகாரின் மிக இளம் வயது எம்.எல்.ஏ.வாக மைத்தில் தாக்கூர் தற்போது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
November 14, 2025 7:27 PM IST
பிகாரின் மிக இளம் எம்.எல்.ஏ. மைத்திலி தாக்கூர்! ஆர்.ஜே.டி வேட்பாளரை எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் தெரியுமா?


