• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!! | India Raises Passport Fees from July 1, 2026 — New Charges, Who’s Affected and How Much It Will Cost

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!! | India Raises Passport Fees from July 1, 2026 — New Charges, Who’s Affected and How Much It Will Cost
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!!

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தேவையான முக்கியமான ஒரு ஆவணம் தான் பாஸ்போர்ட். இது இருந்தால் தான் வேலை, கல்வி, சுற்றுலா, தொழில் என அனைத்து தேவைகளுக்கும் நம்மால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.

அண்மைகாலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெறும் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு திடீரென பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், 1980-ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி புதிய பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!!

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி:

1. 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்:

வழக்கமான விண்ணப்பம் : ரூ.2,500 ( பழைய கட்டணம் ரூ.1,500)

தட்கல் விண்ணப்பம் : ரூ.5,000 (பழைய கட்டணம் ரூ.3,500)

2. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்:

வழக்கமான விண்ணப்பம் : ரூ.3,500 (பழைய கட்டணம் ரூ. 2,000)

தட்கல் விண்ணப்பம் : ரூ.6,000 (பழைய கட்டணம் ரூ.4,000)

3. தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்கு பதில் புதிய பாஸ்போர்ட்:

36 பக்கங்கள்:

சாதாரண விண்ணப்பம் – ரூ.5,000,

தட்கல் விண்ணப்பம் – ரூ. 7,500

60 பக்கங்கள்:

சாதாரண விண்ணப்பம் – ரூ. 6,000

தட்கல் விண்ணப்பம் – ரூ. 8,500

4.18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம்:

புதிய விண்ணப்பம்/புதுப்பித்தல்: சாதாரண விண்ணப்பம் – ரூ.1,750, தட்கல் விண்ணப்பம் – ரூ. 4,250

தொலைந்த/சேதமடைந்த பாஸ்போர்ட்: சாதாரண விண்ணப்பம் – ரூ.4,250, தட்கல் விண்ணப்பம் – ரூ.6,750

இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் அமலுக்கு வருகிறது. ஜூலை 1 மற்றும் அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அனைத்திற்கும் இந்த புதிய கட்டணங்களே வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டண விவரங்களைச் சரிபார்த்து அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் விண்ணப்ப மற்றும் புதுப்பித்தல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண மாற்றம் பாஸ்போர்ட் சேவைகளின் தரம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஜூலை 1க்கு முன்பே விண்ணப்பம் செய்தால் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் 3 நாட்களில் விண்ணப்பம் செய்தால் கட்டண செலவை மிச்சபடுத்தலாம்.

Share This Article

English summary

India Raises Passport Fees from July 1, 2026 — New Charges, Who’s Affected and How Much It Will Cost

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை திடீரென உயர்த்திய மத்திய அரசு!! ஜூலை 1 முதல் அமல்!!-The Government of India has revised passport fees effective July 1, 2026, raising charges across fresh issues, renewals, replacements and Tatkaal services; the change is part of amendments to the Passports Rules, 1980 and is intended to cover operational costs and service upgrades.

Story first published: Saturday, June 27, 2026, 9:07 [IST]

Other articles published on Jun 27, 2026

Read More

Previous Post

மணிக்கு 120 கிமீ வேகம்… நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இயக்குனர் பாக்யராஜ் காலமானார்… | Makkal Osai

Next Post
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்… | Makkal Osai

இயக்குனர் பாக்யராஜ் காலமானார்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin