• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`பால் 43.8%, ஆடை 38.7%, காபி 29.7%..' அமெரிக்கா விதித்த வரி; இந்தியா என்ன செய்யப்போகிறது?

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
`பால் 43.8%, ஆடை 38.7%, காபி 29.7%..' அமெரிக்கா விதித்த வரி; இந்தியா என்ன செய்யப்போகிறது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘இந்தியாவிற்கு 26 சதவிகித வரி, சீனாவிற்கு 34 சதவிகித வரி, ஜப்பானுக்கு 26 சதவிகித வரி…’

– நேற்று முன்தினம் (ஏப்ரல் 2), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விகிதத்தை அடுக்கிக்கொண்டே போனார்.

‘இவை’களுக்கு வரி இல்லை!

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருள்களுக்கும் 26 சதவிகித வரி விதிக்கப்பட்டாலும், இந்த வரிக்கு செமி-கண்டக்டர், பார்மசூட்டிக்கல், செம்பு உள்ளிட்ட பொருள்களுக்கு விதிவிலக்கு உண்டு.

இந்த வரி விலக்கு இந்தியாவிற்கு மட்டுமல்ல. அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும்.

'இவை'களுக்கு வரி இல்லை!|ட்ரம்ப்
‘இவை’களுக்கு வரி இல்லை!|ட்ரம்ப்

எதற்கு, எவ்வளவு வரி?

இதெல்லாம் சரி… எந்தப் பொருளுக்கு எத்தனை வரி என்ற கேள்வி இப்போது எழும். முதலில் அமெரிக்கா எந்த பொருளின் மீது அடிப்படையாக எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை பார்த்துவிடுவோம்.

பால் பொருள்களுக்கு 16.8 சதவிகிதம், ஆடைக்கு 11.7 சதவிகிதம், ரசாயனங்களுக்கு 2.7 சதவிகிதம், காபி, தேநீர், கொக்கோ, மசாலாப்பொருட்களுக்கு 1.5 சதவிகிதம், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 1.2 சதவிகிதம்.

இதே பொருள்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரியின் படி, அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து வசூலிக்கப்போகும் வரி அளவு முறையே 43.8 சதவிகிதம், 38.7 சதவிகிதம், 29.7 சதவிகிதம், 28.5 சதவிகிதம், 28.2 சதவிகிதம் ஆகும்.

US Tax Hike: நடுக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தை; `இப்படித்தான் நடக்கும்’ – ட்ரம்ப் சொன்ன பதில்!

இன்னும் முக்கிய துறைகளாக நகைகள் மற்றும் நவரத்தினங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு மற்றும் விவசாயப் பொருள்களுக்கு வரிகள் முறையே 5.5 – 13.5 சதவிகிதத்தில் இருந்து 32.5 – 40.5 சதவிகிதமும், 5.2 சதவிகிதத்தில் இருந்து 32.2 சதவிகிதமும், 4.5 சதவிகிதத்தில் இருந்து 31 – 32 சதவிகிதமும் உயர்த்தப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயார் - ட்ரம்ப்
பேச்சுவார்த்தைக்கு தயார் – ட்ரம்ப்

இந்த வரிகள் தான் தொடருமா?

ஆக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதே வரி தான் தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தொடர்ந்தால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே பாதிக்கும்.

குறிப்பாக, இந்த வரி உயர்வினால் இந்த இறக்குமதி பொருள்களின் விலை உயர்ந்து அமெரிக்காவின் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

‘இந்த வரி தொடரும்’ என்று சற்றும் மாறாமல் அமெரிக்கா வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. ஆனால், அந்த வெள்ளை மாளிகைக்கும், அமெரிக்காவிற்கும் அதிபரான ட்ரம்ப், “பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று மற்ற உலக நாடுகளுக்கு தூது விட்டுள்ளார்.

`26%+10%’ இந்தியாவிற்கு ட்ரம்ப் அறிவித்த வரி! `இந்த’ 3 துறைகளை பாதிக்குமா? சந்தை நிலவரம் எப்படி?

எதிர்பார்க்கப்படுவது என்ன?

பிற நாடுகள் அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்பது தான் ட்ரம்ப்பின் ஒற்றை குறிக்கோள். அப்படி எந்த நாடு குறைக்கிறதோ, அந்த நாட்டின் மீதான வரியை ட்ரம்ப் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ‘அமெரிக்க பொருள்கள் மீதான் வரி குறைப்பு’ என்ற அறிவிப்புகளை பல நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியா என்ன செய்யப்போகிறது?

கடந்த வாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே வரி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா நம் மீதான வரிகளை குறைக்க வாய்ப்புகள் உள்ளது.

Trump: “இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ‘ஒரே பிரச்னை’ இது தான்!” – இந்தியாவுடனான உறவு குறித்து ட்ரம்ப்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Previous Post

PPF-ல் வருடத்திற்கு ரூ.11 லட்சம் வரியில்லா வருமானம் வேண்டுமா…?

Next Post

‘சட்டவிரோத கோயில்’ என்று கூகிள் வரைபடத்தில் அடையாளமிடுவது  குற்றம்

Next Post
‘சட்டவிரோத கோயில்’ என்று கூகிள் வரைபடத்தில் அடையாளமிடுவது  குற்றம்

‘சட்டவிரோத கோயில்’ என்று கூகிள் வரைபடத்தில் அடையாளமிடுவது  குற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin