Last Updated:
உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து, மும்பையில் இந்தி எதிர்ப்பு வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மகாராஷ்டிராவில் அதிகாரம் கைப்பற்றுவோம் என உறுதியளித்தனர்.
தானும், தனது சகோதரரும் இணைந்து செயல்படுவோம் என்றும் மகாராஷ்டிராவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்றும் உத்தவ் தாக்கரே சூளுரைத்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு வெற்றி தினக் கொண்டாட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து மேடையில் தோன்றினர். அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாக மிகுதியில் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, தானும், தனது சகோதரரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஒன்றிணைந்துள்ளதாகக் கூறினார். இருவரும் இணைந்து மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிராவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று கூறினார். இந்து, இந்துஸ்தானை ஏற்றுக்கொள்வோம், ஆனால் இந்தியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறிய உத்தவ் தாக்கரே, அரசாங்கம் தங்கள் மீது இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
July 05, 2025 7:15 PM IST
“பால் தாக்கரேவாலே முடியாத எங்கள் இணைப்பை ஃபட்னவிஸ் செய்துவிட்டது” – உற்சாகமாக பேசிய உத்தவ் தாக்கரே