ரவாங், குண்டாங்கில் உள்ள தனது வீட்டின் பால்கனியிலிருந்து 17 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹபிஸ் நூர், இந்தச் சம்பவம் ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளை மதிக்கும் வகையில், இந்தச் சம்பவம் குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், சமூக ஊடகங்களில் இது தொடர்பான புகைப்படங்களையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பகிர வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.



