இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.

