• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம் | Rape Accused AAP MLA Flees To Australia

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம் | Rape Accused AAP MLA Flees To Australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார்.

பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக ஆம் ஆத்மி கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனவர் ஹர்​மீத் சிங் பதன்​மஜ்​ரா. இவர் மீது ஜிர்​காபூரைச் சேர்ந்த பெண் ஒரு​வர் பாலியல் குற்​றச்​சாட்டை அளித்​தார். அதில், ஹர்​மீத் முன்பே திரு​மண​மானதை மறைத்து தன்னை திரு​மணம் செய்து ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், பாலியல் ரீதி​யாக​வும், ஆபாச​மான பதிவு​களை அனுப்​பி​யும் தொல்லை கொடுத்​ததுடன் தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்​ததாக​வும் அந்​தப் பெண் புகார் கூறி​யிருந்​தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி எம்​எல்ஏ மீது சிவில் லைன் போலீ​ஸார் பாலியல் வன்​கொடுமை, மோசடி, கொலை மிரட்​டல் விடுத்​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர். இதையடுத்​து, ஹரி​யானா கர்​னல் மாவட்​டத்​தில் உள்ள தப்ரி கிராமத்​தில் உள்ள உறவினர் வீட்​டில் பதுங்​கி​யிருந்த ஆம் ஆத்மி எம்​எல்​ஏவை பிடிக்க தனி போலீஸ் படை சென்​றது. அவரது ஆதர​வாளர்​கள் போலீ​ஸாரை நோக்கி கற்​களை வீசி​யும், துப்​பாக்​கி​யால் சுட்​டும் தாக்​குதல் நடத்​தி​னர். அப்​போது ஹர்​மீத்போலீ​ஸாரின் பிடியி​ல்இருந்து தப்​பி ஆஸ்​திரேலி​யா​வுக்கு சென்​று​விட்​டார்.

இந்த வழக்​கில் ஆஜரா​காததையடுத்து பாட்​டி​யாலா நீதி​மன்​றம் ஹர்​மீதை தேடப்​படும் குற்​ற​வாளி​யாக அறி​வித்து நடவடிக்கை எடுத்​தது. அவருக்கு எதி​ராக லுக்​-அவுட் நோட்​டீஸும் பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்த நிலை​யில் ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த ஒரு பஞ்​சாபி வெப் சேனலில் ஆம்ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பேட்​டியளித்​துள்​ளார். அதில் அவர் கூறியதாவது: என் மீது கூறப்​படும் குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தும் அரசி​யல் சதி​யின் காரண​மாக ஜோடிக்​கப்​பட்​ட​வை. பஞ்​சாப் மக்​களுக்​காக பேசுவதை தடுக்​கவே இந்த வழக்கு போடப்​பட்​டுள்​ளது. பஞ்​சாப் அமைச்​சர்​கள் மற்​றும் எம்​எல்​ஏக்​களிடம் முக்​கிய விவ​காரங்​களில் ஆலோசனை நடத்​தப்​படு​வ​தில்​லை.

பேச்சு சுதந்​திரம் தடுக்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் ஆட்​சியை இழந்​த​பிறகு அந்த தலை​வர்​கள் இப்​போது பஞ்​சாபை கைப்​பற்றி அதே வழி​யில் நாச​மாக்கி வரு​கின்​றனர். எனக்கு நீதி​மன்​றத்​தின் மேல் முழு நம்​பிக்கை உள்​ளது. என்னை போலி என்​க​வுன்ட்​டர் செய்ய போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர். எனவே, ஜாமீன் கிடைத்​தால்​மட்​டுமே இந்​தியா திரும்​புவேன்​. இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

பறிபோகுமா செல்வம் எம்பியின் தலைமை பதவி.! ஆதாரங்களை வெளியிட்ட ரெலோ முக்கியஸ்தர்

Next Post

மலாய்க்காரர்கள்தான் முதலில் கப்பல் கட்டினார்கள்

Next Post
மலாய்க்காரர்கள்தான் முதலில் கப்பல்  கட்டினார்கள்

மலாய்க்காரர்கள்தான் முதலில் கப்பல் கட்டினார்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin