டிராகன் படத்தின் மையக் கதைக்களம், கல்லூரி மாணவர் டி. ராகவன் என்பவரைச் சுற்றி நகைச்சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் எடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தில் தங்கப்பதக்கம் வென்ற ராகவன், காதல் தோல்வியால் மனமுடைந்து “டிராகன்” என்ற புனைப்பெயரில் பிரபலமாகிறார். ஏ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் பயின்ற அவர், 48 பேக்கலாக் அரியர்களை வைத்திருந்தாலும் மாணவர்களிடையே மரியாதை பெறுகிறார். ஆனால், கல்லூரி முடிந்த பிறகு, போலி பட்டம் மூலம் வேலை பெற்று, அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகிறார். இதனை அறிந்த டீன் மயில்வாகனன், அவருக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். 3 மாதங்களுக்குள் 48 அரியர்களையும் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையெனில் வேலையும் திருமணமும் பறிபோகும் என்பதே டிராகன் படத்தின் கதைக்களம் என்பது குறிப்படித்தக்கது.

