Last Updated:
ரமல்லாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பதற்றம் ஏற்பட்டது 19 பாலஸ்தீனர்கள் காயம் 11 பேர் கொல்லப்பட்டதாக ஐநா தெரிவித்தது.
பாலஸ்தீன நகரமான ரமல்லாவுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் உள்ள ஹமாஸ்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதிக்கும் போர் பதற்றம் பரவிய நிலையில் பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரமல்லாவுக்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
பரபரப்பான சாலையில் திடீரென நுழைந்த இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள், போக்குவரத்தை நிறுத்தி அப்பகுதி மக்கள் மீது ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தின. மேலும் அவர்கள் மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த சண்டையில், 19 பாலிஸ்தீனர்கள் காயமடைந்தனர். நடப்பாண்டில் மட்டும் இதுபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளதாகவும் அதில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரமல்லாவுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
August 27, 2025 9:52 AM IST
பாலஸ்தீன நகரத்தில் திடீரென புகுந்த இஸ்ரேல் ராணுவம்.. பதில் தாக்குதல் நடத்திய மக்கள்.. அதிகரித்த பதற்றம்!


