• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாலஸ்தீன ஆதரவு வகுப்பு தோழர்கள் பக்கம் நின்ற இந்திய வம்சாவளி மாணவி @ ஹார்வேர்டு பல்கலை. நிகழ்வு | Indian origin student stands by pro Palestinian classmates at Harvard University

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாலஸ்தீன ஆதரவு வகுப்பு தோழர்கள் பக்கம் நின்ற இந்திய வம்சாவளி மாணவி @ ஹார்வேர்டு பல்கலை. நிகழ்வு | Indian origin student stands by pro Palestinian classmates at Harvard University
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேம்பிரிட்ஜ்: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அந்த வகையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டனர்.

இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணவர்களின் போராட்டம் இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறை கைதும் செய்தது. அந்த வகையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடிய 13 மாணவர்கள் பட்டம் பெற தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அவர்களது வகுப்பில் பயின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ருதி குமார், ஹார்வேர்டு பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்கான வாய்ப்பை பெற்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிரான ஹார்வேர்டு பல்கலைக்கழக நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேலும், மாணவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் இருந்ததையும் சுட்டிக் காட்டினார்.

“இந்த நேரத்தில் பட்டம் பெற முடியாமல் போன 13 மாணவர்களை நான் எண்ணி பார்க்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பேசினார்கள். பேராசிரியர்கள் பேசினார்கள். ஹார்வேர்டு மட்டும் செவிசாய்க்கவில்லை. காசா விவகாரம் நம் வளாகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு கருத்து வேறுபாடு நீடிக்கிறது” என அவர் பேசினார். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அந்த விழாவை அவரும், சுமார் 1000 மாணவர்களும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

யார் இந்த ஸ்ருதி குமார்? – அமெரிக்காவில் குடியேறிய இந்திய குடும்பத்தை சேர்ந்தவர். நெப்ரஸ்காவில் வளர்ந்தவர். மரியன் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். அவரது குடும்பத்தில் இருந்து அமெரிக்காவில் பட்டம் பயின்ற முதல் நபர். மனநல கல்வி சார்ந்த தன்னார்வ அமைப்பான ‘கோ யோகி’-யின் நிறுவனர். ஹார்வேர்டு தெற்காசிய மாணவர் சங்கத்தின் தலைவராக கடந்த 2022 முதல் செயல்பட்டு வருகிறார். தமிழ், கன்னடம், ஆங்கில மொழி அறிந்தவர்.



Read More

Previous Post

விவசாயிகளுக்கு 17வது தவணை நிதி எப்போது கிடைக்கும்? பிஎம் கிசான் குறித்த அப்டேட்!

Next Post

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்; 10,000 பேர் பங்கேற்பு! | Makkal Osai

Next Post
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்; 10,000 பேர் பங்கேற்பு! | Makkal Osai

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்; 10,000 பேர் பங்கேற்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin