அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் கொஞ்சம் கொஞ்சம் கடினமாக்கி வருகிறார்.
முன்பு…
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்கா.
புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கடுமையான விதிமுறைகளை விதித்தது அமெரிக்க அரசு.

நேற்று…
நேற்று மீண்டும் புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையான தடை விதித்துள்ளது அமெரிக்கா.
மேலும், பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.
