Last Updated:
கொழும்புவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பந்து வீசிய இந்தியா, நேபாளத்தை 114 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
முதன்முறையாக நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்ற தொடர், இந்தியாவில் தொடங்கியது.
இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில், பாகிஸ்தானை வீழ்த்தி, நேபாளமும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
கொழும்புவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பந்து வீசிய இந்தியா, நேபாளத்தை 114 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
இதையடுத்து விளையாடிய இந்தியா 12 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்தியாவின் புலா சரண் 27 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் சாதனைப் படைத்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவின் மகுடத்தில் மற்றொரு வைரமாக, மாற்றுத்திறனாளி மகளிர் வெற்றியும் பார்க்கப்படுகிறது.
November 23, 2025 10:09 PM IST


