பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22-ம் தேதி தொடங்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மொத்தம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரின் அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 22-ல் பெர்த்தில் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக ஓவலில் நடக்கிறது. மற்ற மூன்று போட்டிகள் பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் முறையே டிச.14-ம் தேதி, டிச.26-ம் தேதி மற்றும் 2025 ஜன.3-ம் தேதி ஆகிய தினங்கள் நடக்கவுள்ளது.
இந்தியா 2017-ம் ஆண்டு தொடர் வெற்றிகளின் மூலம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தன்வசம் வைத்துள்ள நிலையில், 1991-92-க்குப் பிறகு முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடருக்கு நிகராக நடத்தவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டுகளில் டெஸ்ட் தொடர் மிக சுவாரஸ்யமாக இருந்து வருவதால் இந்தமுறை இத்தொடரை அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் என்றுள்ளார் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லே. அவர் கூறுகையில், “இத்தொடர் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், பார்வையாளர்களையும் வருகையையும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.