• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் உடலுறவு கொள்வதை தடுக்க புதிய ஐடியா

GenevaTimes by GenevaTimes
May 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் உடலுறவு கொள்வதை தடுக்க புதிய ஐடியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் உடலுறவு கொள்வதை தடுக்கும் வகையில், புதுவிதமான படுக்கைகள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?

உலகம் முழுவதும் வீரர், வீராங்கனைகள் எத்தனையோ பதக்கங்களை வென்றிருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை குவிப்பதுதான், ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையாக கருதப்படுகிறது. இதனால், ஒவ்வொரு நாடும் நூற்றுக்கணக்கான வீரர்களை, ஒலிம்பிக் போட்டிகளுக்காக அனுப்பி வைக்கின்றன.

இவ்வாறு வரும் வீரர், வீராங்கனைகளை தங்க வைப்பதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்படுவது வழக்கம். ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பிறகு அந்த ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து டன் கணக்கில் ஆணுறைகளும், கருத்தடை எதிர்ப்பு மாத்திரைகளின் அட்டைகளும் அள்ளப்படுவது வழக்கமாக இருக்கிறது.

விளம்பரம்

எனவே, இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உடலுறவு எதிர்ப்பு படுக்கைகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதலின் நகரம் என்றழைக்கப்படும் பாரிசில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அப்போது, ஒலிம்பிக் கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பாரிஸ் நகரில் தங்கியிருப்பார்கள். அப்போது, அவர்கள் உடலுறவு கொள்வதை தடுக்கும் வகையில் படுக்கைகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் படிக்க:
கே.எல்.ராகுல் இயல்பாக விளையாட முடியவில்லை – அதிர்ச்சி கொடுத்த குளூஸ்னர்!

ஜப்பானை சேர்ந்த ஏர்வீவ் என்ற நிறுவனம் தயாரித்த அட்டையால் செய்யப்பட்ட இந்த படுக்கையில் ஒருவர் மட்டுமே படுக்க முடியும் என்றும், இரண்டு பேர் சேர்ந்து படுத்தால் அது உடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், வீரர், வீராங்கனைகள் உடலுறவு கொள்வது தடுக்கப்படும் என்றும், அவர்கள் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை.

விளம்பரம்

கடந்த 2021ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இதே படுக்கைகள் பயன்படுத்தப்பட்டன. அப்போதும், வீரர், வீராங்கனைகள் உடலுறவு கொள்வதை தடுப்பதற்காகவே புதுவித படுக்கைகள் போடப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், அது பொய் என பல வீரர்கள் நிரூபித்தனர். மிகவும் அதிக எடையுள்ள வீரர்கள் இதில் சொகுசாக படுத்து உறங்கிய நிலையில், வீரர் ஒருவர் இந்த படுக்கையில் தாவிக்குதித்தும் வீடியோ வெளியிட்டார்.

இதன்மூலம், இந்த படுக்கை 200 கிலோ எடை வரை தாங்கும் என்றும் நிரூபிக்கப்பட்டது. ஆனாலும், உடலுறவு தடுப்பு படுக்கை என்றே தகவல் பரவி வரும்நிலையில், மறு சுழற்சியின் அடிப்படையிலேயே இந்த படுக்கைகள் போடப்பட்டிருப்பதாக, ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் படிக்க:
மொபைல் போனில் இந்த சிறிய துளை இருப்பது ஏன் தெரியுமா? – பலருக்கும் தெரியாத தகவல்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு இந்த அட்டைகளை மறுசுழற்சி செய்யமுடியும் என்றும், அதில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மரம் அல்லது இரும்பு படுக்கைகளாக இருந்தால், அதை கையாள்வது மிகவும் கடினம் என்பதால், அட்டையால் தயாரிக்கப்பட்ட இந்த படுக்கைகளை வீரர், வீராங்கனைகளுக்கு வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், மரம் மற்றும் இரும்பு படுக்கைகளை விட, இவை வலிமையானவை எனக் கூறியுள்ள ஒலிம்பிக் அதிகாரிகள், உடலுறவுக்கு தடை என்பதைவிட, எய்ட்ஸ் குறித்தே வீரர், வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

Next Post

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.9% வளரும்: கணிப்பை உயர்த்தியது ஐ.நா. | UN revises India 2024 GDP growth

Next Post
இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.9% வளரும்: கணிப்பை உயர்த்தியது ஐ.நா. | UN revises India 2024 GDP growth

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.9% வளரும்: கணிப்பை உயர்த்தியது ஐ.நா. | UN revises India 2024 GDP growth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin