
பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்தை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அரசுப் பேரவையின் 1971 ஆம் ஆண்டு எண் 1 பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
இதுவரை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் திரும்பப் பெறப்படாது என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

