உதாரணத்திற்கு கட்டுப்பாட்டாளர், “விமானம் 123, ஓடுதளம் 28-ல் தரையிறங்க அனுமதி” எனக் கூறினால், விமானி அதற்கு “ஓடுதளம் 28-ல் தரையிறங்குகிறோம், விமானி 123” என பதில் அளிக்க வேண்டும். விமானி ஏதேனும் ஒரு எண்ணையோ அல்லது சொல்லையோ தவறாகக் கேட்டுவிட்டால் உதாரணத்திற்கு ஓடுதளம் 28-க்கு பதில் 29, என அவர் திருப்பிச் சொல்லும்போது கட்டுப்பாட்டாளர் அதை உடனடியாகத் திருத்த முடியும்.


