Last Updated:
நரேந்திர மோடி, மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளில் அவரை புகழ்ந்து, அவரது கவிதைகள் துணிவை ஊட்டினதாகவும், இந்திய கலாச்சாரத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒளிரச் செய்ததாகவும் தெரிவித்தார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகள் துணிவை தூண்டியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “பாரதியாருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். பாரதியாரின் சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான,…
— Narendra Modi (@narendramodi) December 11, 2025
மேலும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதியார் என பெருமிதம் கூறியுள்ள அவர், நீதியான, அனைவருக்குமான ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டவர் என்றும், தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் பாரதி ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பில்லாதவை எனவும் தெரிவித்துள்ளார்.
December 11, 2025 6:18 PM IST


