காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது பாதுகாப்பு படையினர் தரப்பில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதியான சோட்டா வாரித் என்பவரும் ஒருவர் என பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். முன்னதாக இதே பகுதியில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் புத்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெளிமாநில தொழிலாளர்களை குறி வைத்து கடந்த 2 வாரங்களில் நடந்த நான்காவது தாக்குதல் இதுவாகும். இதனை முடிவுக்கு கொண்டுவர பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கன்யார் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்.
இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க – இந்தியாவின் மிக நீளமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : முக்கிய அம்சங்கள் தெரிஞ்சுக்கலாம்..
கடந்த 29ஆம் தேதி 3 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இவர்கள் அக்னூர் பகுதியில் 28ஆம் தேதி ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள். இதேபோன்று அசம்பாவிதங்களை தடுப்பதற்காக ஜம்மு காஷ்மீரின் பதற்றம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)