பாதுகாப்பு சேவைகள் மேசைப்பந்து போட்டி 2024 நவம்பர் 26 முதல் 28 வரை பனாகொடவில் உள்ள இலங்கை இராணுவ உள்ளக விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றதுடன், இதில் கலந்து கொண்ட முப்படைகளின் மேசைப்பந்து விளையாட்டு வீர வீரங்கனைகள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவம் சாம்பியனாதுடன், இரண்டாம் இடத்தை இலங்கை விமானப்படை வென்றது.
ஆண்கள் பிரிவில் இலங்கை கடற்படை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், அதே பிரிவில் இரண்டாம் இடத்தை இலங்கை இராணுவம் வெற்றி கொண்டது.
அதன் பரிசளிப்பு விழாவில் இலங்கை இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ மேசை பந்து சங்க தலைவருமான மேஜர் ஜெனரல் எம். எஸ். தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
The post பாதுகாப்பு சேவைகள் மேசைப்பந்து சாம்பியன்ஷிப் – 2024இல் வெற்றி இலங்கை இராணுவத்திற்கு appeared first on Thinakaran.


&w=1200&resize=1200,675&ssl=1)