• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' – ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி

GenevaTimes by GenevaTimes
March 25, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' – ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“இது எனக்கு பாட்டி கொடுத்த தங்கக் கம்மல். எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆனால் என்ன… போரால் துயரப்படும் மக்களுக்காக இதைக் கொடுக்கிறேன்” – ஒன்பது வயது சிறுமி ஆசிர் ஃபாத்திமா பிஞ்சுக்கரங்களால் அணிந்திருந்த காதணியைக் கழற்றித் தந்திருக்கிறார்.

ஈரானில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், உலகத்தையே உலுக்கி உள்ளது… மக்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்து வருகிறது.

உலகத்தையே பாதித்துள்ளது என்றால், அந்தப் போர் நடக்கும் நாடான ஈரானில் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

With sincere appreciation for the support and solidarity of the esteemed people of India in providing humanitarian assistance through the Embassy’s bank account, we wish to inform you that, in response to your requests and in order to facilitate the process of aid delivery, this… pic.twitter.com/bzKAkuGpnI

— Iran in India (@Iran_in_India) March 23, 2026

சமீபத்தில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிதியுதவிக்காக ஒரு QR குறியீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. இதை ஸ்கேன் செய்து ஈரான் மக்களுக்கு உதவ பண செலுத்தலாம் என்பதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.

இதற்கு இந்தியாவில் பலரும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். பலரும் பணத்தை அனுப்பி அதன் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படித்தான் ராம்பன் பகுதியைச் சேர்ந்த ஆசிர் ஃபாத்திமா தனது கம்மலைக் கழற்றி கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல…. அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மிஷா ஷாகிர் தனது உண்டியலை அப்படியே கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

“இரண்டு வருஷமா ஈத் பண்டிகைக்காக நான் சேர்த்து வைத்த காசு இது. இப்போது அங்கே இருப்பவர்களுக்குத்தான் இது ரொம்பத் தேவை” என்று மழலை மொழியில் அவர் கூறியது அங்கிருந்த தன்னார்வலர்களை நெகிழ வைத்துள்ளது.

இந்த உதவிக்கரம் வெறும் குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. புத்காம் பகுதியைச் சேர்ந்த ஜனா பேகம் (53) தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளைத் தானமாக வழங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

“என் மகளின் திருமணத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவுவதே இப்போதைய முதற்கடமை” என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார் அவர்.

ஆரம்பத்தில் ஜாதிபால், ஹஸ்னாபாத் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் தொடங்கிய இந்த இயக்கம், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு பெரும் அலையாக மாறியுள்ளது.

எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் விரிகிறது… இணைகிறது!



Read More

Previous Post

இந்தியாவின் 500 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Next Post

போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ இடம் பெறவில்லை | Makkal Osai

Next Post
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ இடம் பெறவில்லை | Makkal Osai

போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ இடம் பெறவில்லை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin