சிட்னியில் செந்தமிழ்ச் செல்வர், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் ‘சங்க இலக்கியக்
காட்சிகள்’, ‘இன்னும் கன்னியாக’ ஆகிய இரண்டு நூல்கள் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டன. கடந்த 2024 ஜூன் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு, சிட்னி, தூங்காபீ செயின்ட் அந்தனி தேவாலய மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு தலைமையில் கவிஞரும், ஒலிபரப்பாளருமான சௌந்தரி கணேசன், எழுத்தாளரும், ஒலிபரப்பாளருமான கானா பிரபா, மாணவர்களான செல்வன் அகலவன் ஸ்ரீஸ்கந்தராசா, செல்வி வேதவர்ணா ராஜா ஆகியோர் நூல்களுக்கான அறிமுக உரைகளை நிகழ்த்தினர். பிரபல கவிஞர் நவாலியூர் இளமுருகனார் பாரதி, எழுத்தாளர் ஆசி.கந்தராசா, ஆசிரியர் திருநந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

The post பாடும்மீன் ஸ்ரீகந்தராசாவின் நூல்கள் சிட்னியில் வெளியீடு appeared first on Thinakaran.

