மக்களவைத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது.
18-ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.
27 பேர் கொண்ட அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருந்தார். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக பாஜக-வின் தேர்தல் அறிக்கை அமையும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
