உங்கள் மகனுக்கு துணை முதல்வா் பதவி, முக்கிய அமைச்சரவை இடங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு, ‘இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மக்கள் விரும்பும் சிறப்பான ஆட்சியை அளிப்பதே எங்கள் நோக்கம். மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்துள்ளதால் பொறுப்பும் அதிகரித்துள்ளது. எங்கள் கூட்டணியில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை. ஓய்வு எடுப்பதற்காகவே சொந்த கிராமம் வந்தேன்’ என்றாா்.
ஃபட்னவீஸ் புதிய முதல்வா்: பாஜக முடிவு
மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வா் யாா் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவா் ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க தேவேந்திர ஃபட்னவீஸின் பெயா் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தோ்ந்தெடுக்க திங்கள் (டிச.2) அல்லது செவ்வாய்க்கிழமை (டிச.3) பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்’ என்றாா்.

