Last Updated:
பாஜகவின் தற்போதைய செயல் தலைவரான நிதின் நபீன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாஜகவின் தேசியத் தலைவர் பதவிக்கு தற்போதைய செயல் தலைவரான நிதின் நபீன் மனுதாக்கல் செய்ய இருக்கிறார். தற்போது செயல் தலைவராக இருக்கும் இவரின் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் 1980ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தவர் நிதின் நபீன். தந்தை மறைவுக்குப் பிறகு, அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்னா மேற்கு தொகுதியின் இடைத்தேர்தலில், 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது 26 வயதில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதன் பின்னர், 2010, 2015, 2020 மற்றும் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 4 முறை பங்கிபூரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2021ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த நிதின் நபீன், தற்போது சாலை மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட நிதின் நபீன், பாஜக தேசிய செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுச்செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
பூத் அளவில் கட்சியை வலுப்படுத்துவதில் வல்லவரான நிதின் நபீன், தற்போது பாஜகவின் இளைஞர் பிரிவான பி.ஜெ.ஒய்.எம். செயலாளராகவும் உள்ளார்.
வாஜ்பாய், அத்வானி தொடங்கி, அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் அலங்கரித்த பதவியில் நிதின் நபீன் மூலம் இளம் ரத்தத்தை பாய்ச்ச தயாராகியுள்ளது பாஜக.


