Last Updated:
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் நிர்மலா சீதாராமன், புரந்தரேஸ்வரி, வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பெண் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023 ஆம் ஆண்டே நிறைவடைந்துவிட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படாத நிலையில், முதல் முறையாக பாஜக-வின் தேசிய தலைவர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக-வின் தேசிய தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த நிலையில், புரந்தரேஸ்வரியின் பெயர் உள்ளது. இவர் ஆந்திர மாநில பாஜக முன்னாள் தலைவர் ஆவர். இதேபோன்று பாஜக தேசிய தலைவருக்கான பட்டியலில் வானதி சீனிவாசனின் பெயரும் அடிபடுகிறது.
வழக்கறிஞராக இருந்து தமிழக பாஜகவின் முக்கிய அடையாளமாக மாறிய வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவரை பாஜக மகளிரணி தேசியத் தலைவராக கட்சி நியமித்தது. 2022 ஆம் ஆண்டு, பாஜக மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராகவும் உயர்த்தியது.
July 05, 2025 2:20 PM IST