சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
“உலகில் மிகப் பெரிய கட்சியாக கூறிக் கொள்ளும் பாஜகவின் தேசிய தலைவரை இதுவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை” என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, “என் முன்னால் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவர்களின் தேசியத் தலைவரை சில குடும்ப உறுப்பினர்களை கொண்டு தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், நாங்கள் 12 – 13 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். உங்களுக்கு அதற்கான நேரம் தேவையில்லை. நீங்கள் எப்படியும் அடுத்த 25 ஆண்டுகள் தலைவராக இருப்பீர்கள்” என்று பதிலளித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைந்தும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால் அவரின் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.