ஷிவமோகாவில் விநாயகர், நாக சிலைகள் அவமதிக்கப்பட்ட நிலையில் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமோகா நகரின் சாந்திநகர் வார்டில் பங்காரப்பா லேஅவுட்டின் பிரதான சாலையில் அண்மையில் சிலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அந்த சிலைகளில் நாக சிலை சாலையோர வடிகாலில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிலைகள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.