தவெகவின் உறுதி
தவெக, வக்பு சட்ட திருத்த விவகாரத்தில் இறுதி வரை சட்ட ரீதியாகவும், மக்களை அணிதிரட்டியும் போராடும் என கூறிய சிடிஆர் நிர்மல்குமார், இதற்கு முன்பு பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களோடு நின்று போராடியதை சுட்டிக்காட்டினார். “எங்களது தலைவர் விஜய், கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொரு இடத்திலும் நின்று போராடியவர். வாக்குகளுக்காக அல்ல, மக்கள் நலனுக்காகவே இதை செய்கிறோம்,” என்று கூறினார்.

