Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு உதவ பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாகவும், எஸ்.ஐ.ஆர். விவகாரங்களில் தனிச்சையாக செயல்பட்டதாகவும், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றன. காங்கிரஸ் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா தளம் ஆகியவை டெல்லியில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான பல மனுக்களையும் உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது அதிகாரங்களைப் பயன்படுத்திய விதம் மற்றும் சர்ச்சைக்குரிய ‘படிவம் 6’ மாற்றம் உள்ளிட்டவை குறித்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சம்பந்தப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.
It is now established beyond doubt that Gyanesh Kumar changed Form 6 illegally and unilaterally.
This is just one more proof of him abusing his position to help the BJP.He and everyone else involved in this criminal assault on our democracy will be held accountable. https://t.co/a33eJdPetu
— Rahul Gandhi (@RahulGandhi) October 5, 2026
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தனது பதவியை பாஜகவுக்காக முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ஞானேஷ் குமார் ‘படிவம் 6’-ஐ சட்டவிரோதமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் மாற்றினார் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. பாஜகவிற்கு உதவுவதற்காக அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கு இது மற்றொரு சான்று. அவரும், நமது ஜனநாயகத்தின் மீதான இந்தக் குற்றவியல் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இதற்கான பொறுப்பு ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


