Last Updated:
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய பெண் தலைவரான உமா பாரதி, கடந்த 2006-ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி ‘பாரதிய ஜனசக்தி கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.
தமிழக பாஜகவின் முக்கிய முகமாக இருந்த அண்ணாமலை, தற்பொழுது கட்சியிலிருந்து விலகிய சூழலில், கடந்த காலங்களில் பாஜகவில் இருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய முக்கியத் தலைவர்களின் அரசியல் வரலாற்றை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் தொடக்க கால மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங், கடந்த 1999-ஆம் ஆண்டு கட்சியிலிருந்து விலகி ‘ராஷ்ட்ரிய கிராந்தி கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதேபோல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய பெண் தலைவரான உமா பாரதி, கடந்த 2006-ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி ‘பாரதிய ஜனசக்தி கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். ஆனால், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், பின்னர் அக்கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் அவர் பாஜகவிலேயே இணைந்தார்.
இவர்களைத் தொடர்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாஜகவிலிருந்து விலகித் தனது சொந்த கட்சியைத் தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில் எடியூரப்பாவின் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று பாஜகவின் வெற்றியைப் பெருமளவில் பாதித்தது. பின்னர், 2014-ஆம் ஆண்டு அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
அதேநேரம், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சத்ருகன் சின்ஹா, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜவிலிருந்து விலகியிருந்தாலும், அவர்கள் யாரும் தனிக்கட்சி தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Jun 06, 2026 10:59 AM IST


