Last Updated:
பாங்காக்கில் வஜிரா மருத்துவமனை முன்பு 50 அடி பள்ளம் உருவாகி, கார்கள் மற்றும் கட்டடங்கள் மண்ணுக்குள் இழுக்கப்பட்டன.
பரபரப்பு மிகுந்த சாலை ஒன்று கண்மூடித் திறப்பதற்குள் மண்ணுக்குள் புதைந்த காட்சி, காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வஜிரா மருத்துவமனைக்கு முன்பு சாலையின் அடியே பூமியில் இருந்து கழிவுநீர் பீய்ச்சி அடித்தது. அடுத்த சில நிமிடங்களில் மின் கம்பம் உள்ளே இழுக்கப்பட்டு அந்த சாலையே அப்படியே பெயர்ந்து மண்ணுக்குள் புதைந்தது.
இதில் கார்கள், மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதிகள் உள்ளிட்டவை பள்ளத்துக்குள் இழுக்கப்பட்டன. இதில் நல்வாய்ப்பாக, ஒரே ஒரு கார் மட்டும் பள்ளத்தில் விழாமல் நூலிழையில் தப்பியது.
சாலைக்கு அடியில் இருந்த அதிகப்படியான அழுத்தத்தால் கழிவுநீர் குழாய் வெடித்து இந்த சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், சாலையில் சுமார் 50 அடி ஆழமும், 900 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தில் உள்வாங்கிய வாகனங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
September 24, 2025 10:04 PM IST


