Last Updated:
Pakistan Train Hijacking | மாக் நகரையொட்டிய மலைப்பகுதியில் மூன்று வெவ்வெறு இடங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 2-ஆவது நாளாக மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தானில் ரயிலுடன் பயணிகளை கடத்திய பயங்கரவாதிகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 155 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் கடத்தினர். ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர் உள்பட 400-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களுடன் சண்டையிட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 155 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எதிர்தரப்பில் ரயில் என்ஜின் ஓட்டுநர், பாதுகாப்புப் பணியாளர்கள் 8 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாக் நகரையொட்டிய மலைப்பகுதியில் மூன்று வெவ்வெறு இடங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 2-ஆவது நாளாக மீட்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
பிணைக் கைதிகளுக்கு அருகே வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஆடைகளை அணிந்த தற்கொலைப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதால், மிக கவனத்துடன் மீட்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
March 12, 2025 1:15 PM IST


