• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாகிஸ்தான் பவுலிங் காலி! டி20 உலகக்கோப்பையில் 34 பந்துகளில் வேட்டையாடிய ஸ்மிருதி மந்தனா | Smriti Mandhana: Smriti Mandhana’s Quickfire Half-Century Powers India Against Arch-Rivals Pakistan in the T20 World Cup 2026

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாகிஸ்தான் பவுலிங் காலி! டி20 உலகக்கோப்பையில் 34 பந்துகளில் வேட்டையாடிய ஸ்மிருதி மந்தனா | Smriti Mandhana: Smriti Mandhana’s Quickfire Half-Century Powers India Against Arch-Rivals Pakistan in the T20 World Cup 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, June 14, 2026, 20:53 [IST]

பர்மிங்ஹம்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய அனல் பறக்கும் லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விறுவிறுப்பான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரரும், துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, வெறும் 34 பந்துகளில் அதிரடி அரைசதம் கடந்து மாஸ் காட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, பொறுப்புடன் ஆடிய மந்தனா பின்னர் அதிரடிக்கு மாறி இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யக் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

Smriti Mandhana

பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணியின் ஷபாலி வர்மா, ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நங்கூரம் போல நிலைத்து நின்ற ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சாளர்களின் உத்திகளைத் துல்லியமாகக் கணித்து விளையாடினார்.

மைதானத்தில் செட்டிலான பிறகு தனது அசுர வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைத் தெறிக்கவிட்ட அவர், வெறும் 34 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி மிரட்டினார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த இக்கட்டான சூழலில் ஸ்மிருதி மந்தனா அடித்த இந்த அதிவேக அரைசதம், உலகக் கோப்பை வரலாற்றில் அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களுக்கு மத்தியில், மந்தனா தனது பேட்டை உயர்த்தி அரைசதத்தைக் கொண்டாடிய தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, 44 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் இந்திய அணியின் ரிச்சா கோஷ் அதிரடியில் விளாசி தள்ளினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிச்சா கோஷ், 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை குவித்துள்ளது.

English summary

Smriti Mandhana: Smriti Mandhana’s Quickfire Half-Century Powers India Against Arch-Rivals Pakistan in the T20 World Cup 2026

Read More

Previous Post

‘சுய கோல்’ அடித்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட கேப்டன்

Next Post

ஜெனரேட்டிவ் AI ஒன்னு போதும்! வருஷத்துக்கு ரூ.60 லட்சம் சம்பளம்! IT துறையில் புது புரட்சி! இனி இதுதான் டாப்பு! | These AI Skills Can Help Indian Tech Workers Earn Up to Rs.60 Lakh Annually

Next Post
ஜெனரேட்டிவ் AI ஒன்னு போதும்! வருஷத்துக்கு ரூ.60 லட்சம் சம்பளம்! IT துறையில் புது புரட்சி! இனி இதுதான் டாப்பு! | These AI Skills Can Help Indian Tech Workers Earn Up to Rs.60 Lakh Annually

ஜெனரேட்டிவ் AI ஒன்னு போதும்! வருஷத்துக்கு ரூ.60 லட்சம் சம்பளம்! IT துறையில் புது புரட்சி! இனி இதுதான் டாப்பு! | These AI Skills Can Help Indian Tech Workers Earn Up to Rs.60 Lakh Annually

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin