பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிடங்களில் , 266 பேர் நேரடியாக மக்கள் செலுத்தும் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 70 உறுப்பினர்கள் நியமனத்தில், 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (பிப்.08) நடைபெற்றது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம்
5,121 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வன்முறை சம்பவங்களை தடுக்க சுமார் 65,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 12 கோடியே 80 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், அவர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றினர்.
இதையும் படிங்க:
தளபதி விஜய் தலைவர் ஆகிவிட்டார், இனி ஒரே தலைவர் தான்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு
சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்படி முன்னாள் முதலமைச்சர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
