Last Updated:
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் ரத்து செய்தது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இதனிடையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதில் சிப்கதுல்லா, ஹாரூன், கபீர் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டுடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் ரத்து செய்தது. அடுத்த மாதம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் உடனான முத்தரப்பு தொடரை ரத்து செய்வதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
October 18, 2025 12:56 PM IST