Last Updated:
மேட்ச்சின்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அந்நாட்டு அணியின் ஜெர்சியை அணிந்து மேட்ச் பார்க்க வந்திருந்தார்.
பாகிஸ்தான் டீ ஷர்ட் அணிந்திருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மேட்ச்சை ரசிகர் ஒருவர் பார்க்க வந்திருந்தார். அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் டீ ஷர்ட்டை மறைத்துக் கொள்ளுமாறு அல்லது அதன் மேல் மற்றொரு ஆடையை அணிந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர்.
இதற்கு அந்த ரசிகர் மறுப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் மைதானத்தில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் தற்போது வரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடையக் கூடிய சூழலில் இருந்தது. அப்போது கே.எல். ராகுல், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை டிரா செய்ய வைத்தனர்.
இந்த மேட்ச்சின்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அந்நாட்டு அணியின் ஜெர்சியை அணிந்து மேட்ச் பார்க்க வந்திருந்தார். அவரிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், போட்டியில் விளையாடாத அணியின் ஜெர்சியை அணிய வேண்டாம். அதனை மறைத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அந்த ரசிகர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அதனை மொபைல் கேமராவில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில நிமிடங்களில் மேலும் சில பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் வந்து வாக்குவாதம் செய்தனர்.
July 28, 2025 8:08 PM IST