• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு | Pakistan based TRF declared global terrorist organization says US India welcomes

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு | Pakistan based TRF declared global terrorist organization says US India welcomes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும்(எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பேசும்போது பஹல்காம் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருந்தார்.

இந்நிலையில்தான் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பின் மூலம், டிஆர்எப் அமைப்புடனான அனைத்து விதமான தொடர்புகளும் சட்டவிரோதமாக்கப்பட்டு, அதன் சொத்துக்கள் முடக்கப்படும்.

இந்தியா பாராட்டு: தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறும் போது, “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது.

இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்களை செய்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.

டிஆர்எப் அமைப்பை வெளி நாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ள முடிவுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறேன்” என்றார்.



Read More

Previous Post

ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு | five dead in hyderabad car accident

Next Post

‘kiss cam’ நேரலையில் CEO-பெண் HR நெருக்கம்: கார்ப்பரேட் உலகில் பரபரப்பு

Next Post
‘kiss cam’ நேரலையில் CEO-பெண் HR நெருக்கம்: கார்ப்பரேட் உலகில் பரபரப்பு

‘kiss cam’ நேரலையில் CEO-பெண் HR நெருக்கம்: கார்ப்பரேட் உலகில் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin