Last Updated:
மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கிய தனது அலுவலகத்தை மூடுகிறது.
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த அதன் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கப்போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 9,000 பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கவிருப்பதாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.
இந்தியரான சத்ய நாதெல்லா முதன்மை செயல் அதிகாரியாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மே மாதம் 6,000 பேரை பணிநீக்கம் செய்தது, அடுத்த சில நாட்களில் 300 பேரை வீட்டுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் தனது பணியாளர்களில் 4 சதவிகிதம் பேர், அதாவது 9,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான பணிநீக்க ஆணைகளை அனுப்ப தொடங்கிவிட்டதாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தனது பாகிஸ்தான் அலுவலகத்தையும் மைக்ரோசாஃப்ட் மூடியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இயங்கிவந்த அந்நிறுவனம் அந்நாட்டைவிட்டு வெளியேறுகிறது.
ஒரு பெரு நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறுவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்நாட்டு பொருளாதார அறிஞர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் முழு வணிகத் தளத்தை இயக்கவில்லை, மாறாக நிறுவனம், கல்வி மற்றும் அரசாங்க வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தொடர்பு அலுவலகங்களை கொண்டிருந்தது என்ற தகவலும் சொல்லப்படுகிறது.
July 04, 2025 7:48 PM IST
பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?