• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு | Afghanistan announces new dam to restrict kunar river water to Pakistan

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு | Afghanistan announces new dam to restrict kunar river water to Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காபூல்: பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும் இடையே கடும் சண்டை நடை​பெற்று வரு​கிறது. கத்​தார் நாட்​டின் சமரசத்​தின்​பேரில் கடந்த 19-ம் தேதி சண்டை நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. எனினும் இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களில் தொடர்ந்து பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது.

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் நாடு​களில் குனார் நதி பாய்​கிறது. இந்த நதி​யின் நீளம் 480 கி.மீ. ஆகும். நதி​யின் சுமார் 70 சதவீத தண்​ணீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வரு​கிறது. இதை தடுக்க குனார் நதி​யில் புதிய அணையை கட்ட ஆப்​கானிஸ்​தான் அரசு முடிவு செய்​திருக்​கிறது.

இதுகுறித்து ஆப்​கானிஸ்​தான் நீர்​வளத் துறை அமைச்​சர் முல்லா அப்​துல் லத்​தீப் மன்​சூர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “கு​னார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும். இந்த நதி​யின் மீது ஆப்​கானிஸ்​தான் மக்​களுக்கு முழு உரிமை இருக்​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஆப்​கானிஸ்​தான் நீர்​வளம், எரிசக்தி துறை செய்​தித் தொடர்​பாளர் மதி​யுல்லா அபித் கூறிய​தாவது: குனார் நதி​யில் புதிய அணையை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கான களஆய்வு நடத்​தப்​பட்​டு, விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்டு இருக்​கிறது. புதிய அணை​யின் மூலம் ஆப்​கானிஸ்​தானில் 1,50,000 ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 45 மெகா​வாட் மின்​சா​ர​மும் உற்​பத்தி செய்​யப்​படும். இந்த அணை​யால் நாட்​டின் உணவு தானிய உற்​பத்​தி, மின் உற்​பத்தி கணிச​மாக அதி​கரிக்​கும்.

குனார் நதி தொடர்​பாக ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் இடையே எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. எனவே எவ்​வித பிரச்​சினை​யும் இன்றி நதி​யில் பிரம்​மாண்ட அணையை கட்​டு​வோம். பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீர் தடுத்து நிறுத்​தப்​படும். இவ்​வாறு மதி​யுல்லா அபித் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ஆப்​கான் அரசு​வட்​டாரங்​கள் கூறுகையில், ‘‘அண்​மை​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்​டது. இதன்​காரண​மாக சிந்து நதி ஒப்​பந்​தத்தை இந்​தியா ரத்து செய்​தது. இதே பாணி​யில் குனார் நதி​யில் புதிய அணையை கட்டி பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க உள்​ளோம்’’ என்றன.



Read More

Previous Post

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | No one put pressure on trade deal negotiations Union Minister Piyush Goyal

Next Post

4 maut dalam kemalangan jalan raya | Makkal Osai

Next Post
4 maut dalam kemalangan jalan raya | Makkal Osai

4 maut dalam kemalangan jalan raya | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin