• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் முக்கிய மாற்றம்..? பிளேயிங் 11 இதுதான்

GenevaTimes by GenevaTimes
February 23, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் முக்கிய மாற்றம்..? பிளேயிங் 11 இதுதான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த பிப்ரவரி 20 அன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே இந்திய அணி, ஒரு சில மாற்றங்களுடன் இந்த போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் 10 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்த குல்தீப் யாதவ் சிறப்பாகவே பந்துவீசினார். ஆனால் அவரால் அந்த போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்கமுடியவில்லை.

இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ் அனுபவத்தை கொண்டிருந்தாலும், தற்போது அசத்தலான ஃபார்மில் இருக்கும் வருண் சக்கரவர்த்தி, பாகிஸ்தான் வீரர்களுக்குக் கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக வேறு எந்த வீரரும் விலகாத பட்சத்தில், இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் ஷுப்மான் கில் மீது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தனது கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசியுள்ள கில், இந்தப் போட்டியிலும் சதம் அடித்து ஹாட்ரிக் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் இணையவும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய பங்காற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மா (19 போட்டிகளில் 873 ரன்கள்) மற்றும் விராட் கோலி (16 போட்டிகளில் 678 ரன்கள்) ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளதால், இந்தப் போட்டியிலும் அவர்களின் பழைய ஃபார்ம் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராஃபியில் வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா.. இங்கிலாந்தை பந்தாடிய ஜோஷ் இங்லிஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவமிக்க முகமது ஷமி தலைமையில் இந்திய பந்துவீச்சுப் பிரிவு களமிறங்குகிறது. அவருடன் இணைந்து வங்கதேச அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்ஷித் ராணா ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாத இந்த தொடரை இந்த ஜோடி நிரப்புமா என்பதை பார்க்கவேண்டும்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11:

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி

பாகிஸ்தான் அணியின் உத்தேச பிளேயிங் 11:

இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான்(கே, வி.கீ), சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது

First Published :

February 23, 2025 10:20 AM IST

Read More

Previous Post

’சீமானே சிக்னல் கொடுத்துவிட்டார்!’ காளியம்மாள் குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

Next Post

வீட்டிலிருந்தே தினசரி ரூ.1500 வருமானம்… ஜாப்ராபாடி எருமை வளர்ப்பில் கொட்டும் லாபம்…

Next Post
வீட்டிலிருந்தே தினசரி ரூ.1500 வருமானம்… ஜாப்ராபாடி எருமை வளர்ப்பில் கொட்டும் லாபம்…

வீட்டிலிருந்தே தினசரி ரூ.1500 வருமானம்... ஜாப்ராபாடி எருமை வளர்ப்பில் கொட்டும் லாபம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin