Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடந்தால் இந்தியாவால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா?
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS), விமானப்படை மற்றும் கடற்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) போன்ற நிபுணர்களுக்கு இடையேயான ஆலோசனைகள், தேசம் முழுக்க போர் பாதுகாப்பு ஒத்திகை உள்ளிட்டவைகளின் மூலம், இந்தியா ஒரு மோதலுக்குத் தயாராக உள்ளது என்பதை பாகிஸ்தான், உலகம் மற்றும் அதன் சொந்த மக்களுக்கு மத்திய அரசு ஏறக்குறைய உறுதியாக அறிவித்துள்ளது.
பொதுவாக போர் என்றால் அதிக பொருட்செலவு ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்திலும் அது பிரதிபலிக்கும் எனும் கருத்து நிலவுகிறது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர்மூண்டால், இந்தியாவால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா எனும் கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழக்கூடியதையும் நாம் பார்க்க முடிகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடந்தால் இந்தியாவால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா?
இது குறித்து மத்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்களில் விசாரிக்கும்போது, ‘ஆம், இந்தியாவால் முடியும்’ எனும் உறுதியாக தெரிவிக்கின்றனர். மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பாதுகாப்புக்கான ஒதுக்கீடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்தப் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக ரூ. 6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 9.53% கூடுதல் நிதி என்பது கவனிக்கத்தக்கது.
மத்திய அரசின் உயர் வட்டாரங்கள் நியூஸ்18-க்கு தெரிவித்த தகவலின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது என்றும், தற்போது அது 4.4% ஆக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிதிப் பற்றாக்குறை 9.2% ஆக இருந்தது என்பது கவனிக்கவேண்டியது. இந்தியாவுக்கு நிதி பிரச்சனை இல்லை என்றும், போதுமான வருவாய் உள்ளது என்றும் அரசு உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, ராணுவ நடவடிக்கையின்போது அவசரமாக உபகரணங்கள் மற்றும் பிற தேவைகளை வாங்க வேண்டியிருக்கும். இந்த நிதி செலவிற்கும் ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் ஏற்கனவே தனது பாதுகாப்புச் செலவுகளில் 18% அதிகரிப்பு பற்றிப் பேசி வருகிறது. மேலும் இந்தியா எடுத்த பல நடவடிக்கைகளின் காரணமாக நிதிப் பற்றாக்குறையையும் எதிர்கொள்கிறது.
மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) க்கு முறையாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்துள்ளது.
வருவாய்த் துறை இதை FATF-க்கு வாய்மொழியாகத் தெரிவித்துள்ளது, மேலும் பொருளாதார விவகாரத் துறை ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் இதுபோன்ற பிற வங்கிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


