பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் கச்சிதமாக பந்துவீசிய சவுரப் நெட்ராவால்கர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடியவர் என்ற ருசிகர தகவல் வெளியாகியுள்ளது
மும்பையில் பிறந்த சவுரப், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு விளையாடியுள்ளார். கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சந்தீப் சர்மா ஆகியோருடன் இந்திய அணியில் விளையாடியுள்ளார் சவுரப் 14 ஆண்டுகளுக்கு முன்பே பாபர் ஆசமுக்கு எதிராக பந்துவீசியுள்ளார்.
இதையும் படிக்க:
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி… தோனியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா..
மேலும் 2010 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராகவும் இருந்துள்ளார்.
பின்னர் கிரிக்கெட்டை விட்டுவிட்டு மென்பொறியாளராகிய சவுரப் தற்போது ஆரக்கல் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கோடிங் எழுதும் பணிகளுக்கு நடுவே அவ்வப்போது கிரிக்கெட்டையும் விடாமல் விளையாடி வந்துள்ளார் சவுரப்.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சவுரப் நெட்ரவால்கர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)