Last Updated:
ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்ததற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் கருத்துகள் அவரது மதிப்புகளை பிரதிபலிக்கின்றன என்று பாஜக கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த அக்கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் சரணடைந்துவிட்டார். அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் போதும், பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். வரலாறு இதற்குச் சாட்சி.
இதுதான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் குணம். மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள். 1971 ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போரின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அமெரிக்காவின் கடற்படை வந்தாலும் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன் என்றார். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சரணடையாது. எனக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆட்களைத் தெரியும்; கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும், பயந்து ஓடிவிடுவார்கள்” எனப் பேசினார்.
#WATCH | Bhopal, Madhya Pradesh | Congress MP & LoP Lok Sabha, Rahul Gandhi says, “Now, I understand RSS-BJP well. If slight pressure is put on them, they run away out of fear. When Trump called Modi ji-‘Modi ji kya kar rahe ho, Narender-Surrender and with ‘ji hazooor’, Narender… pic.twitter.com/1tsVmSPzWi
— ANI (@ANI) June 3, 2025
இதற்கு பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “நாட்டின் பிரதமருக்கு எதிராக இதுபோன்ற அநாகரீகமான கருத்துகளை வெளியிடும் ராகுல் காந்தியின் வார்த்தைகள் அவரது மதிப்புகளைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானுக்காக இதயம் துடிக்கும் ராகுல் காந்தியிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கலாம்.
#WATCH | Noida, UP: On Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi’s statement, BJP national spokesperson Pradeep Bhandari says, “Rahul Gandhi’s words reflect his values as he makes such indecent remarks against the country’s Prime Minister. But this is what can be expected from… https://t.co/hS0EB1n8gK pic.twitter.com/DFeGwyacu0
— ANI (@ANI) June 3, 2025
பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டதில், சல்மான் குர்ஷித் முதல் சசி தரூர் வரை, ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். பாகிஸ்தானே இதற்கு ஆதாரங்களை அளிக்கிறது. நாட்டு மக்கள் நாகரிகமற்ற ராகுல் காந்தியை பாகிஸ்தானின் முகவராகப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
June 03, 2025 9:23 PM IST
“பாகிஸ்தானுக்காகத் துடிக்கும் ராகுல் காந்தியின் இதயம்..” – கடும் விமர்சனத்தை முன்வைக்கும் பாஜக


