Last Updated:
தொடக்க நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.
பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கிரிக்கெட் தொடர் நடைபெறும் நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் 12000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஐசிசி போட்டிகள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் ஐசிசி கோப்பை தொடரை நடத்துகிறது. இதனையொட்டி அங்கு 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
மற்ற இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமான பெண் போலீசார், 18 மூத்த காவல்துறை அதிகாரிகள், 54 டிஎஸ்பி, 135 இன்ஸ்பெக்டர்கள் என இரவு பகலாக போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணி செய்து வருகின்றனர்.
அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுடைய வசதிக்காக சிறப்பு விமானங்கள் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. தொடக்க நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.
February 19, 2025 5:58 PM IST


