Last Updated:
ஆரம்பகட்ட விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது
பாகிஸ்தானில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் கில்ஜித்-பல்டிஸ்தான் என்பது அந்நாட்டின் வடக்கே உள்ள ஒரு மலைப்பாங்கான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். இந்த ஆண்டு, பருவமழையால் இப்பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் கொண்டு செல்வதில் ஈடுபட்டு வந்தன.
இத்தகைய சூழலில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள் மற்றும் பணியாளர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்தவுடன், காவல்துறை மற்றும் ராணுவத்தின் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இருப்பினும், நிலச்சரிவு மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக அமைந்தது.
September 01, 2025 4:04 PM IST


